சரவணன் நாயகனாக நடிக்கும் படம் கருப்பன். நாயகன் படத்தில் வரும் வேலுநாயக்கர் போன்ற கேரக்டர் இதில் சரவணனுக்கு. நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை என்பது கருப்பன் கான்செப்ட்.
படத்திற்கு பூஜை போட்ட கையோடு கருப்பன் என்ற பெயரை தூக்கிவிட்டு வேலுநாயக்கர் என்று பெயர் சூட்டியுள்ளனர். படத்தின் பூஜையின் போது, கருப்பனில் வரும் சரவணனின் கதாபாத்திரம் நாயகன் வேலுநாயக்கரை போன்றது என்றார்கள். இப்போது வேலு நாயக்கரின் பெயரையே படத்துக்கு வைத்துள்ளனர்.
நாயகன் மாதிரியான கதை என்று கூறி நாயகனை திரும்ப எடுப்பார்களா?
படத்தின் இயக்குனர் ஹரிதான் பதில் சொல்ல வேண்டும்!