ஜே.கே. ரித்தீஷ், ரமணா நடித்திருக்கும் படம் நாயகன். சரவண சக்தி இயக்கம். மாதத்திற்கு நான்கு படம் ரிலீஸ் செய்யும் பைனான்ஸ் பின்புலம் உள்ளவர் ரித்தீஷ். நாயகன் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு வருகிற 22ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார். ஏன்?
ரித்தீஷுடன் இருப்பவர்களுக்கே ஆச்சரியம். படத்தை உருவாக்கியவர்களுக்கு இதில் எந்த அதிசயமும் இல்லை.
ஹாலிவுட் படமான செல்லுலாரை சுட்டு ரித்தீஷ் தரப்பு நாயகன் என்றும், எஸ்.வி. சேகர் வேகம் என்ற பெயரிலும் படம் எடுத்தனர். பெயருக்கேற்ப வேகம் முந்திக் கொண்டது. வேகத்தை தொடர்ந்து நாயகனை வெளியிட்டால் குட்டு வெளிப்படும். நான்கு நாள் ஓடக்கூடிய படம் ஒன்றரை நாளில் திரும்பி விடும்.
அதனால் படத்தை ஆறப்போட்டு ஆகஸ்டு 22 ஆம் தேதி வெளியிடுகிறார்கள். ரித்தீஷுக்கு இதில் போலீஸ் வேடம். கதைப்படி கதாநாயகன் நடிகர் ரமணா. காசு இருப்பது ரித்தீஷிடம் என்பதால், போஸ்டர்களில் அவர் மட்டும் கலர் கலராக முறைத்துக் கொண்டிருக்கிறார்.
நாயகனாக காசு போதும் போலிருக்கிறது.