கமர்ஷியல் இயக்குனரில் கே.எஸ். ரவிக்குமாருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் சுராஜ். இயக்கிய இரண்டு படங்களும் கமர்ஷியல் ஹிட் என்பதே இதற்கு காரணம்.
தனுஷ், தமன்னா நடிப்பில் 'படிக்காதவன்' படத்தை இயக்கி வரும் சுராஜ், தெலுங்கு படம் ஒன்றின் தமிழ் ரீ-மேக்கை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தி நடிக்கிறார்.
சுராஜின் மருதமலையில் நடித்த அர்ஜுன் மீண்டும் சுராஜ் இயக்கத்தில் நடிக்கியிருப்பது புதிய தகவல். ஜாம்பவான் படத்தை வெளியிட்டவர்கள் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் 'துரை' படத்தில் தற்போது நடித்து வருகிறார் அர்ஜுன்.