ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா பினிஷிங் சரியில்லையே! 'குசேலன்' வசூல் எப்படி என்று கேட்டால் வடிவேலுவின் இந்த டயலாக்தான் பதிலாக வருகிறது.
ஓபனிங்கில் விண்ணுக்கு தாவிய வசூல் படிப்படியாக மண்ணுக்கு இறங்கிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்திலும் அப்படியே!
இங்கிலாந்தில் முதல் வாரத்தில் 1,00,000 பவுண்டுகள் வசூலித்த மூன்று திரைப்படங்களில் குசேலனும் ஒன்று. மற்ற இரு படங்கள் 'சிவாஜி', 'தசாவதாரம்'.
முதல் பதினேழு திரையிடல்களில் 1,06,394 பவுண்டுகள் வசூலித்துள்ளது குசேலன். (இந்திய மதிப்பில் 88.14 லட்சம்). டாப் டென்னில் பதிமூன்றாவது இடம். புதிய இந்திப் படங்களின் வசூலையெல்லாம் காலி செய்துள்ளது ரஜினி படம்.
ஓபனிங்கில் நன்றாகப்போன படம் படிப்படியாக மதிப்பு குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். அடுத்த வாரம் இந்திப் படங்கள் குசேலனை முந்த அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் விமர்சகர்கள்.