Publish Date: Thu, 07 Aug 2008 (20:46 IST)
Updated Date: Thu, 07 Aug 2008 (20:46 IST)
குட்டையை குழப்புவதில் கெட்டிக்காரர் வேலு பிரபாகரன். கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர், கடவுள் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என படம் எடுத்தார். இந்த முரண்பாடு இவரிடம் எப்போதும் உண்டு.
தொப்புளை நான்கு விநாடிக்கு மேல் காண்பித்தால் நறுக்கிவிடும் சென்சார் நம்முடையது. இது தெரிந்தும் டாப்லெஸ் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டது சமீபத்திய நிகழ்வு.
இவரின் அடுத்த அதிரடி 'நவீன பெரியார்'. இன்றைய சூழலில் பெரியார் பிறந்து வந்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனையை அடிப்படையாக வைத்து நவீன பெரியாரை எடுக்க இருக்கிறாராம். படத்தின் இணை தயாரிப்பு பாடலாசிரியர் சினேகனாம். கட்டிப்பிடி திருமணங்கள் நடத்திவரும் அதே சினேகன்.
இரு கலகலக்காரர்கள் இணைகிறார்கள்... பெரியார் பாடு திண்டாட்டம்தான்!