Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏகன் கதை!

ஏகன் கதை!
, வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (20:26 IST)
தாடி வைத்த கில்லர்... சாதுவான அண்ணன். ஒரே கதாபாத்திரத்தில் இருமுகம் காட்டும் அஜித்தின் ஏகன் கதை என்ன? ஆர்வமாக இருப்பவர்களுக்கு இதோ எக்ஸ்குளூஸிவாக!
webdunia photoWD

ராணுவ அதிகாரி அஜித், அவரது அப்பா இறக்கும் தருவாயில் அவருக்கு இன்னொரு மனைவியும் ஒரு மகனும் இருப்பது தெரிய வருகிறது. அந்த மகன் (நவ்தீவ்) கல்லூரியில் படிப்பதை அறிந்து கொள்கிறார் அஜித். அனாதையாக இருக்கும் அஜித்திற்கு தம்பி நவ்தீப் மீதும் அவரது அம்மா சுஹாசினி மீதும் அளவுகடந்த பாசம். தான் யார் என்பதை சொல்லாமலே அவர்களுடன் பழகுகிறார்.

இதற்குமுன் உயர் ராணுவ அதிகாரியின் மகளுக்கு கொலை மிரட்டல் வருகிறது. அந்த அதிகாரியின் மகள் படிக்கும் கல்லூரிக்கு, மாணவனாக பாதுகாப்பிற்குச் செல்கிறார் அஜித். நவ்தீப் படிப்பதும் அதே கல்லூரியில்தான். நயன்தாரா கல்லூரி பேராசிரியை.

அஜித் கொலை முயற்சியை தடுத்தாரா? தனது சித்தி குடும்பத்துடன் இணைந்தாரா? நயன்தாராவுடனான காதல் வெற்றி பெற்றதா? இந்த கேள்விகளுக்கான பதிலை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கியுள்ளார் ராஜு சுந்தரம்.

இன்னொரு சுவாரஸ்யமான தகவல். ஷாருக்கான், சுஷ்மிதா சென் நடித்த Main Hoon Na படத்தின் ரீ-மேக்தான் ஏகன். இந்த சிதம்பர ரகசியத்தை ஏகன் யூனிட் இன்னும் மறைத்தே வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil