Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடிவேலுவின் புது முடிவு!

Advertiesment
வடிவேலுவின் புது முடிவு!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:42 IST)
விஜயகாந்துடன் சண்டை, கமலுடன் கருத்து வேறுபாடு, அஜித்துடன் ஆரம்பத்திலிருந்தே சண்டை, சுந்தர் சி, சுராஜுடன் ஈகோ மோதல், தனுஷுடன் தகராறு, சிம்புவுடன் எப்போதும் இல்லை... கூட்டிக் கழித்தால் வடிவேலுக்கு நண்பர்களைவிட அவர் பகைத்துக் கொண்டவர்களே அதிகம்.

இதில் இன்னொரு அபாயகரமான முடிவையும் எடுத்துள்ளார் வடிவேலு.

அரசியல் பின்னணி கொண்டவர்களின் படங்களில் நடிப்பதில்லை! அந்த மாதிரி ஆட்களின் படங்களில் நடித்தால், இல்லாத எதிரிக்கு சவால் விடவைத்து நிஜ எதிரிகளிடம் மாட்டவைத்து விடுகிறார்களாம்.

மேலும் இவர் பேசும் வசனங்களை எதிரி கட்சிகளை உசுப்பேற்றிவிடவும் பயன்படுத்துகிறார்களாம். இதனால், அரசியல் பின்னணி கொண்டவர்களுடன் தொழில்துறை உறவு கிடையவே கிடையாதாம்.

சரத்குமாருடன் பல படங்களில் இணைந்து காமெடி செய்த வடிவேலு அவரின் சொந்தப் படம் 1977-ல் நடிக்காததற்கு இதுதான் காரணமாம்.

1977-ல் வடிவேலுக்கு பதில் நடித்திருப்பவர், விவேக்!

Share this Story:

Follow Webdunia tamil