டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா உலகப் புகழ்பெற்றது. இதில் ஒரு படும் திரையிடப்படுவது அதை இயக்கியவர்களுக்கு கிடைக்கும் கெளரவம்.
செப்டம்பர் மாதம் தொடங்கும் டொரண்டோ திரைப்பட விழாவில் அந்த கெளரவம் தீபா மேத்தாவுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஸ்பெஷல் ரெப்ரசண்டேஷன் பிரிவில் இவரது ஹெவன் ஆன் எர்த் திரையிடப்படுகிறது. ப்ரீத்தி ஜிந்தா இதில் நடித்துள்ளார்.
பஞ்சாபி மொழியில் எடுக்கப்பட்ட இப்படத்தை இந்தியில் 'டப்' செய்து வெளியிட உள்ளனர். டொரண்டோ திரைப்பட விழாவில் தீபா மேத்தாவின் படங்கள் இடம்பெறுவது இது முதல்முறை அல்ல. ஆயினும் அதிக மகிழ்ச்சி தீபா மேத்தாவுக்கு. சென்ற வருடம், ஸ்பெஷல் ரெப்ரசண்டேஷன் பிரிவில் திரையிடப்பட்டது, கோய்ன் சகோதரர்களுக்கு சிறந்த இயக்குனர்களுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்த 'நோ கண்ட்ரி ·பார் ஓல்டு மென்'.
தீபா மேத்தாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இருக்கிறது.