ஸ்டெப் கட்டிங் தலையுடன் போலீஸ் ஆபிஸராக நடித்ததெல்லாம் அந்தக் காலம். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் போலீஸ் மிடுக்கு தெரிய மெனக்கெடுகிறார்கள் இன்றைய ஜூனியர்கள். இதற்காக எந்த எல்லைக்கு செல்லவும் அவர்கள் தயார்.
காக்க காக்க படத்தில் நடிப்பதற்கு முன் விஜயகுமார் போன்ற போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார் சூர்யா. சத்யம் படத்தில் அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக நடிப்பதற்கு உடம்பை சிக்ஸ் அப்ஸ் பழனி படிக்கட்டாக மாற்றிய விஷால், போலீஸ் மேனரிஷங்களை நிஜ போலீஸ் அதிகாரிகளிடமிருந்து கற்றுக் கொண்டார்.
பொம்மன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அம்சவர்தனும் இவர்கள் வழியில் உடம்பை முறுக்கேற்றி, தனது நடை உடை பாவனையை கவால் துறையினரின் ஆலோசனைப்படி மாற்ற உள்ளார்.
பொம்மன் மதுரை பின்னணியில் தயாராகிறது. மதுரை போலீஸ் கமிஷனராக வருகிறார் அம்சவர்தன். சத்ரபதி படத்தை இயக்குகிறார்.
ஜூனியர்களின் சின்சியாரிட்டிக்கு ஒரு சல்யூட்!