சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் பிராண்டுக்கு இலவச விளம்பரமாக வருகிறார் விவேக். அரை டவுசர் இளம் பெண்கள்தானே மல்லையாவின் இஷ்டம் என்ற உங்களது சந்தேகம் புரிகிறது. விவேக் கிங்ஃபிஷர் அவதாரம் எடுத்திருப்பது அந்தோணி-யார்? திரைப்படத்தில்!
C.T. பாண்டி இயக்கத்தில் ஷாம், மல்லிகா கபூர் நடித்துவரும் படம் அந்தோணி யார்? சாஃப்ட் கேரக்டரில் சமீபமாக நடித்துவந்த ஷாமை இதில் கரடு முரடாக காட்டியிருக்கிறாராம். மொத்த படப்பிடிப்பையும் அலையோடு விளையாடும் கடற்கரையோரம் எடுத்திருக்கிறார்கள்.
இதில் கிங்ஃபிஷர் என்ற கேரக்டரில் வருகிறாராம் விவேக். பெயர் அயல்நாடாக இருந்தாலும் இந்த வேடத்தில் விவேக் இமிடேட் செய்வது எம்.ஜி.ஆரை. எம்.ஜி.ஆர். மீனவனாக நடித்த படகோட்டி பட கெட்டப்பை அப்படியே இதில் பாலோ செய்கிறாராம். கதையளவுக்கு காமெடியும் படத்தில் பேசப்படும் என்றார் பாண்டி.
பார்த்து அப்பு... எம்.ஜி.ஆர். பக்தர்களிடம் சிக்கினால் பஞ்சாமிர்தம்தான்!