மணிரத்னம் அபிஷேக், ஐஸ்வர்யா ராயை வைத்து இயக்கும் இந்திப் படத்தின் பெயர், Ravan. ராமாயணத்தை நிகழ்காலத்திற்கு ஏற்ப எடுக்கிறாராம். வில்லனாக நடிப்பது இதுவரை ஹீரோவாக நடித்து வந்த கோவிந்தா.
இதே படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராயுடன் ப்ரியாமணியும் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன். இன்னொரு வில்லனாக கார்த்திக் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திக்கின் பங்சுவாலிட்டி உலக பிரசித்தம். அரசியல் மீட்டிங்கையே கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்து கலங்கடித்தவர். அப்படிப்பட்டவரை மணிரத்னம் நடிக்க வைக்கிறார் என்றால் அது அவரது ஆத்ம பலம்... வாழ்த்துகள்!
கார்த்திக்கை தொடர்ந்து வெள்ளி விழா நாயகன் என்று செல்லமாக அழைக்கும் மோகனும் வில்லனாகிறார். வித்தியாசமான வில்லன். படம்? விரைவில் மோகனே அறிவிப்பாராம்!