ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தம்பதியின் புதிய படம் ராக்கோழி. சுப்ரமணியபுரம் ஜெய் ஹீரோ. ஹீரோயினை பல வாரங்களாக தேடி இறுதியில் கண்டடைந்திருக்கிறார்கள்.
பிரபல வீஜே லேகா வாஷிங்டன் ராக்கோழியில் ஜெய் ஜோடியாக நடிக்கிறார். கெட்டவன் படத்தில் சிம்புவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் லேகா. வரம் தந்த பெருமாளே அதனை பிடுங்கிக் கொண்டது போல், லேகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என கெட்டவனிலிருந்து அவரை நீக்கினார் சிம்பு. பிறகு கெட்டவன் புராஜெக்டே ட்ராப் ஆனது வேறு விஷயம்.
ஜெயம் கொண்டான் படத்தில் தற்போது நடித்துவரும் லேகா, ஸோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் ராக்கோழி. சென்னை 600 028, சுப்ரமணியபுரம் படங்களில் நடித்த ஜெய்க்கு தனி ஹீரோவாக இது இரண்டாவது படம்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்து வரும் ரவீந்திரன் ராக்கோழியை தயாரிக்கிறார். இசை ஜி.வி. பிரகாஷ்.