உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு படங்களை இயக்கியதில் கிடைக்காத பெயர், புகழ் சுப்ரமணியபுரம் படததில் வில்லனாக நடித்ததற்கு சமுத்திரகனிக்கு கிடைத்துள்ளது.
சினிமாவில் கதையே ஹீரோ என்ற வகையை சேர்ந்த இவரது புதிய படம், நாடோடிகள். சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார் கதையின் நாயகன். சுப்ரமணியபுரத்தை ஒளி ஓவியமாக மாற்றிய கதிர், நாடோடிகளுக்கு கேமரா.
புதுமுக நடிகையை சசிகுமாருக்கு ஜோடியாக போட தேடி வருகின்றனர். வடிவான தமிழ் முகம் இருந்தால், நீங்களும் நாடோடிகளின் நாயகி ஆகலாம்!