இன்னும் எத்தனை நாடுகளுக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை. மெக்சிகோவில் சில காட்சிகளை எடுத்த கந்தசாமி யூனிட் தற்போது ஓமன் சென்றுள்ளது.
சுசி. கணேசன் இயக்கத்தில் கந்தசாமியை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் தாணு. பணத்தை தண்ணீராக செலவிடுகிறவர் இவர். கந்தசாமிக்காக மழை நீராக வழியவிடுகிறாராம்.
ஓமன் நாட்டுக்கு சுசி. கணேசன் சென்றிருப்பது ஒரு பாடல் காட்சியை எடுப்பதற்கு. எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி என்ற அந்தப் பாடலுக்கு விக்ரம், ஸ்ரேயா ஆடுகின்றனர்.
படம் முடிவதற்குள் பாதி நாடுகளைச் சுற்றி வந்துவிடும் கந்தசாமி யூனிட். தயாரிப்பாளர் செலவு செய்ய தயாராக இருக்கும்போது ஒரு நடை நிலவுக்கு கூடதான் போய்விட்டு வரலாம்!