அனிமேஷன் படம் குழந்தைகளுக்கானது. இந்த இந்திய மனப்பான்மையை சிதறிடிப்பதுபோல் தயாராகி வருகிறது செளந்தர்யாவின் சுல்தான் தி வாரியர்.
செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவும், அட்லாப்சும் இணைந்து தயாரிக்கும் இதன் உத்தேச பட்ஜெட் அறுபது கோடிக்கும் மேல். இந்திய நடிகர் ஒருவரை வைத்து முழு நீள அனிமேஷன் படம் தயாராவது இந்தியாவில் இதுவே முதல் முறை.
இன்னொரு சாதனை, சுல்தான் பேசப் போகும் மொழிகள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச் உள்பட பதினெட்டு மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிடுகிறார்களாம்.
இந்திய திரைப்படமொன்று இத்தனை மொழிகளில் டப் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
ரஜினி பாய்ந்தது பதினாறு அடி என்றால் மகளின் இலக்கு முப்பத்தியிரண்டு. புலியின் மகளல்லவா... தாண்டினாலும் தாண்டுவார்!