Publish Date: Fri, 01 Aug 2008 (20:08 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (20:08 IST)
மூன்று கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம். ப்ரேம் பை ப்ரேம் இழைத்ததில் இருபத்து மூன்று கோடியை தொட்டு நிற்கிறது. தயாரிப்பாளராக சின்ன வருத்தமாவது வேண்டுமே. சத்யம் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா எக்ஸ்ட்ரா தெம்புடன் இருக்கிறார்.
படத்தின் ஹீரோ விஷாலிடம் தான் சுணக்கம். த்ரிஷாவுடன் காதல் என்று யாரோ பத்த வைத்த நெருப்பில் நட்பு வட்டாரத்தில் ஏக புகைச்சலாம். சத்யம் வெளியான பிறகு சிறிது நாள் ஓய்வெடுக்கும் முடிவில் இருப்பவர், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிக்கிறார்.
சூப்பர் ஹீரோவாக அவரே இயக்கி நடிக்கும் படம் ஒன்று. விஷாலின் நண்பர் பிருத்வி இயக்கும் படம் இன்னொன்று. இதில் விஷாலுக்கு இரண்டு வேடங்கள். இவர் இரண்டு வேடங்களில் தோன்றும் முதல் படம் இது.
இரண்டில் எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது விஷாலின் பூவா தலையா முடிவுக்கு விடப்பட்டுள்ளது.