மீதா-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! இப்படியொரு போஸ்டரை பார்க்க நேர்ந்தால் என்ன தோன்றும். அடப்பாவிகளா... பெயரில் ந வை தொலைத்து விட்டீர்களே என்று சலிப்பாகத்தானே இருக்கும்.
சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட அந்தப் போஸ்டரை பார்த்தவர்கள் இப்படித்தான் குழம்பிப் போனார்கள். ஆனால், அது நமிதாவுக்கு வாழ்த்து சொன்ன போஸ்டரில்லை. பிறகு யார்?
மாட்டுத்தாவணி படத்துக்காக பவித்ரன் கண்டெடுத்த கவர்ச்சி நாயகி மீத்தா. உனக்கே உயிரானேன் படத்தில் இவரே நாயகி. இந்த இரண்டு யூனிட்டை தாண்டி திரையுலகில் இருப்பவர்களுக்கே இந்த அறிமுக நடிகையை தெரியாது.
இந்த அழகில் இவரது நலம் விரும்பிகள் செய்த அலப்பரைதான் அந்த போஸ்டர். பார்ப்பவர்களை குழப்ப வேண்டும் என்பதற்காகவே, மீத்தாவல் உள்ள த்தை எடிட் செய்து மீதாவுக்கு வாழ்த்துகள் என அச்சடித்துள்ளனர்.
குறுக்கு வழியில் அதிக தூரம் பயணிக்க முடியாது என்பதை மீத்தாவுக்கு யாராவது புரிய வைத்தால் நல்லது.