அரை நிர்வாணக் காட்சிகள் நிறைந்த வேலுபிரபாகரனின் காதல் அரங்கம் நினைவிருக்கிறதா? பத்திரிக்கைகளில் வெளியான ஒன்றிரண்டு 'சைவ' ஸ்டல்களுக்கே சகலரும் ஆடிப்போயினர்.
மார்பகம் என்பது பால் சுரக்கும் வெறும் உறுப்பு. இதனை புரிந்து கொண்டால் செக்ஸ் குற்றங்கள் குறையும். மறைத்து வைப்பதால்தான் அதன் மீது அனைவருக்கும் ஆர்வம் என தனது படத்தின் டாப்லெஸ் காட்சிகளுக்கு தத்துவ விளக்கம் தந்தார் வேலுபிரபாகரன்.
தத்துவத்தை கேட்கும் நிலையிலில்லை சென்சார். சகட்டு மேனிக்கு வெட்ட வேண்டும் என அவர்கள் கத்திரியை தீட்ட, படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பினார். அங்கும் தோல்வி.
வேறு வழியில்லாமல் சென்சார் ஆட்சேபம் தெரிவித்த அரை நிர்வாண காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டு வேறு காட்சிகளை இணைத்து படத்தை வெளியிடும் முடிவில் உள்ளார். படத்தின் பெயரையும் காதல் பக்கங்கள் என மாற்றியிருக்கிறார் வேலுபிரபாகரன்.
எறிந்த பகுதிகள் கிடைக்குமா வேலுபிரபாகரன் ஸார்?