Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேரனை முற்றுகையிட்ட நிருபர்கள்!

Advertiesment
சேரனை முற்றுகையிட்ட நிருபர்கள்!
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:41 IST)
ராமன் தேடிய சீதை இசை வெளியீட்டு விழாவில் அபஸ்வரமாக பேசி அனைவரையும் நெளிய வைத்தவர் சேரன்.

பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுவை நேற்று முளைத்த நடிகர்களே சட்டை செய்வதில்லை. சேரன் ஆலமரம். கிசுகிசு சலசலப்புக்கெல்லாம் அசைந்து கொடுக்கலாமா?

பத்திரிக்கை கிசுகிசுவை ஆதாரமாக வைத்து இசை விழாவில் சூடானார் சேரன். உணர்ச்சியின் வேகத்தில் பத்திரிக்கையாளர்களை தவறான வார்த்தையில் அவர் குறிப்பிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கை நிருபர்கள், கேமரா மேன்கள் அனைவரும் அரங்கைவிட்டு வெளியேறினர்.

தவறை உணர்ந்த சேரன் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். வெளியே சென்ற நிருபர்களிடம் அவர் சமாதானம் பேசப் போனபோது, சேரனுக்கு எதிராக நிருபர்கள் கோஷமிட்டனர்.

சேரனால் இசை விழா வசை விழாவானதில் அனைவருக்கும் வருத்தம்.

Share this Story:

Follow Webdunia tamil