ஒரு கோடி என்பது பணம் அல்ல, நபர்கள். குசேலன் ஓபனிங் ஒரு கோடி பேரை திரையரங்குகளுக்கு அழைத்துவரும் என நம்புவதாக படத்தை வாங்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
நாளை குசேலன் வெளியாகிறது. நேற்று சென்னையில் படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் ஐந்து நாட்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது. சில திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
சிவாஜி அளவுக்கு குசேலன் முன்பதிவு இருப்பதால், படத்தை முதல்கட்டமாக ஒரு கோடி பேர் வரை பார்க்க வாய்ப்பிருப்பதாக கூறினார் சாமிநாதன்.
நட்பை பற்றிய படம். ரஜினியின் நிஜ வாழ்வை பிரதிபலிக்கும் கதை. இலக்கு இரண்டு கோடியாகவும் உயரலாம்!