திருவண்ணாமலை ரமண மகரிஷியின் மானசீக சீடர் இளையராஜா. ஏசு, புத்தரை விட சிறந்தவர், வல்லமை மிக்கவல், உடலை வென்றவர் ரமணர் என்ற எண்ணம் இசைஞானிக்கு உண்டு. விழாவொன்றில், இளையராஜாவின் தோற்றம் மகரிஷியைப் போல் உள்ளது என்ற வாலியின் பேச்சை மெளனமாக ஏற்றுக் கொண்டவர் அவர்.
அப்படிப்பட்டவருக்கு ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் தியானம் செய்வது போல் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்...?
அழகர் மலை படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் ஒரு பாடலில் இளையராஜா ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானம் செய்வதுபோல் காட்சி வருகிறது. இதில் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் இளையராஜா.
படத்தை தயாரிப்பது அவரது நண்பர் சங்கிலி முருகன் என்பதும் இதற்கு ஒரு காரணம்.