நாளை தசாவதாரம் வெளியாகி ஐம்பதாவது நாள். திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பி, சி சென்டர்களை விட ஏ சென்டர்களில் கலெக்சன் அதிகம்.
சென்னை நகரில் மட்டும் சென்ற வார இறுதிவரை கமல் படம் வசூலித்தது 9.44 கோடிகள். குசேலன்தான் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும்.
படத்தின் ஐம்பதாவது நாளை முன்னிட்டு கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஐம்பது மின் விசிறிகளை அளித்தது. எளிமையாக நடந்த இவ்விழாவில் சம்பந்தப்பட்ட இல்ல நிர்வாகிகளிடம் மின் விசிறிகளை கமல்ஹாசன் வழங்கினார்.
விழாவை கமல் நற்பணி இயக்கத் தலைவர் குணசீலன் ஒழுங்கு செய்திருந்தார்.