Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொலை மிரட்டல் - நடிகர்களுக்கு பாதுகாப்பு!

கொலை மிரட்டல் - நடிகர்களுக்கு பாதுகாப்பு!
, புதன், 30 ஜூலை 2008 (19:37 IST)
பெங்களூரு, அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்திப் படவுலகைச் சேர்ந்த ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் போன்றவர்களுக்கும் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான முஜாகிதின் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக தெரிகிறது. இஸ்லாம் விதிப்படி திரைப்படங்களில் நடிப்பது இஸ்லாமுக்கு எதிரானது. எனவே நடிப்பதை நிறுத்தாவிடில் கொலை செய்யப்படுவீர்கள் என அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டலால் பாலிவுட் பீதியடைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil