Publish Date: Wed, 30 Jul 2008 (19:24 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (19:23 IST)
சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா அடுத்து சுராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
கமர்ஷியல் இயக்குனர் வரிசையில் அழுத்தமான தடம் பதித்துள்ளார் சுராஜ். தனுஷை வைத்து படிக்காதவன் படத்தை இயக்கிவரும் இவர் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். தெலுங்கு விக்கிரமாதித்திடு படத்தின் ரீ-மேக் இது.
அதற்குமுன் ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். சுள்ளான், கஜினி படங்களைத் தயாரித்த சேலம் ஏ. சந்திரசேகரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
கஜினி தவிர பிப்.14, சுள்ளான், பத்ரி என தயாரித்த அனைத்துப் படங்களும் தோல்வி கண்டதால், இனி படமே தயாரிப்பதில்லை என சொந்த ஊர் திரும்பியவர் சந்திரசேகரன். அவரின் திரும்பி வரும் முடிவு நல்வரவாக அமையட்டும்!