ஓடி ஓடி உழைக்கணும் என்றார் எம்.ஜி.ஆர். தமன்னாவுக்கு இருக்கும் பிஸியில் பறந்து பறந்து உழைக்கிறார்.
கல்லூரிக்குப் பிறகு தமன்னாவின் கிராஃப் தாறுமாறாக ஏறியிருக்கிறது. எந்தளவு என்றால், சக நடிகைகளின் வயிற்றில் புளி கரைக்கும் அளவுக்கு!
ஆனந்த தாண்டவம், சூர்யாவுடன் அயன், தனுஷுடன் படிக்காதவன்... ஒரே நேரத்தில் மூன்று படங்கள். ஆனந்த தாண்டவம் படப்பிடிப்பு அமெரிக்காவில், அயன் ஆப்பிரிக்காவில், படிக்காதவன் ஹைதராபாத்தில். ஒவ்வொரு கண்டத்தில் ஒரு படம். ஆனாலும், எந்த சங்கடமும் இவரால் படத்துக்கு இல்லையாம்.
படிக்காதவன் படப்பிடிப்பை முடித்து அமெரிக்கா சென்றவர், அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் அப்படியே ஆப்பிரிக்கா சென்று சூர்யாவுடன் டூயட் பாடி திரும்பியிருக்கிறார்.
இவரின் சின்சியாரிட்டிக்காகவே தேடி வருகின்றனவாம் வாய்ப்புகள்.