தெனாவட்டு படத்துக்காக குத்துப் பாடலொன்றுக்கு ஆடியிருக்கிறார்கள் ஜீவாவும், பூனம் பஜ்வாவும்.
கற்றது தமிழ், ராமேஸ்வரம் ஆகிய பரிசோதனை முயற்சிகள் தோல்வி கண்டதால் கமர்ஷியல் படம் தெனாவட்டை ரொம்பவும் நம்பிக் கொண்டிருக்கிறார் ஜீவா. அவரது நம்பிக்கைக்கு ஏற்ப படம் நெடுக கமர்ஷியல் ஐட்டங்களாக திணித்து வருகிறார் படத்தின் இயக்குனரான வி.வி. கதிர். அப்படி வைக்கப்பட்டதுதான் அந்த குத்துப் பாடல்.
உசிலம் பட்டி சந்தையிலே
வசியம் பண்ணி போறவளே...
எனத் தொடங்கும் அந்தப் பாடலில் வார்த்தையில் ஜாலம் காட்டியிருக்கிறார் நா. முத்துக்குமார்.
ஜென்டில்மேன் படத்தின் உசிலம் பட்டி பெண்குட்டி பாடலைப் போல இந்த உசிலம்பட்டி வசியக்காரியும் பிரபலமாகும் என சொல்லி வருகிறார் கதிர்.