ஹாலிவுட் படமான பாபெலின் (Bable) பாதிப்பில் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் சரோஜா.
மொராக்கோ, மெஹிகோ, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் பல்வேறு பின்னணியில் வசிக்கும் மனிதர்களை ஒரு சம்பவம் இணைக்கிறது என்பதை பாபெலில் கூறியிருந்தார் இயக்குனர் அலெஜான்ட்ரோ கொன்ஸாலஸ் இனாரிட்டு (Alejandro Gonzalez Inarittu).
மணிரத்னத்துக்கு ஆய்த எழுத்து படத்தை எடுக்க இன்ஸ்பிரேஷனாக அமைந்த அமோரெஸ் பெர்ரோஸ் படத்தை இயக்கியவரும் இவரே!
பாபெலின் திரைக்கதை யுக்தியை மட்டும் சரோஜாவுக்காக எடுத்துக்கொண்டு புதிய கதை பண்ணியிருக்கிறார் வெங்கட்பிரபு. தமிழ் சினிமா உலகினர் மட்டுமின்றி, ரசிகர்களிடையேயும் படம் குறித்து நிறைய எதிர்பார்ப்பு. சூப்பர்ஹிட்டாகியிருக்கும் யுவனின் பாடல்கள் இதற்கு காரணம்.
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சரோஜாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.