கமலின் மெகா ப்ராஜெக்ட் மர்மயோகியின் கதாநாயகி யார் என்பது முடிவாகவில்லை. அதற்குள் படத்தில் ஒப்பந்தமாகி பலரின் புருவத்தை உயர வைத்துள்ளார் வையாபுரி.
சின்ன வேடமோ, பெரிய வேடமோ கமல் படம் என்றால் கண்டிப்பாக வையாபுரி இருப்பார் என்பது எழுதப்படாத விதி. தசாவதாரத்திலும் தபால்காரராக சிறிய வேடத்தில் நடித்தார்.
வையாபுரியின் சினிமா வாழ்க்கையில் அவர் இதுவரை கமலுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் மட்டும் பத்து. இந்த சித்து வேலை எப்படி சாத்தியமானது என்பது வையாபுரிக்கே ஆச்சரியம்.
ரஜினியின் குசேலனிலும் வையாபுரி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.