தலைப்பைப் படித்ததும், நயன்தாரா போன்று கருணாஸும் கவர்ச்சிக்கு தயாராகி விட்டாரோ என நினைக்க வேண்டாம். இது வேறு.
சத்யம் படத்தில் நயன்தாரா குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டி பிரதானமாக வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் மிக்கி மவுஸ் கார்ட்டூன் வேடத்தில் ஒரு பாடலில் தோன்றுகிறார் நயன்.
இதனை தனது திண்டுக்கல் சாரதியில் பின்பற்றுகிறார் கருணாஸ். குழந்தைகளை கவரும் காமெடியை இந்த ரீ-மேக்கில் கூடுதலாக சேர்த்தவர், குழந்தைகளின் மனம் கவர்ந்த கார்ட்டூன் கேரக்டர் ஒன்றின் வேடத்தை போடுகிறார். இதற்காக அவர் தேர்வு செய்திருப்பது டோரா புச்சி.
திண்டுக்கல் சாரதியின் ஒரிஜினலான, வடக்கு நோக்கி யந்திரத்தில் இதுபோன்ற காமெடி எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க தமிழுக்காக கருணாஸ் உருவாக்கியிருக்கும் ரெடிமேட் தயாரிப்பு.
இதனை தனது திண்டுக்கல் சாரதியில் பின்பற்றுகிறார் கருணாஸ்.