நடிப்பு, பணம், புகழ் என்ற ராஜபாட்டையிலிருந்து எப்போதோ விலகிவிட்டார் ரேவதி. சமூக சேவையுடன் கூடிய வேலைகளே இப்போது இவரது இலக்கு.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பான்யன் அமைப்பில் ரேவதி காட்டும் ஈடுபாடு அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் வெப்சைட் ஒன்றை ஆரம்பித்தார் ரேவதி. பொதுவாக சினிமா நட்சத்திரங்களின் புகழ்பாடுவதற்கே அவர்கள் தொடங்கும் இணையதளம் பயன்படும். ரேவதி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் தனது இணையதளத்தை வடிவமைத்துள்ளார்.
சினிமாவுக்கு வெளியே இப்படியென்றால், சினிமாவுக்குள்ளும் இவர் சீரியஸ்தான். குழந்தைகளுக்கான திரைப்படம், திரைப்பட மாணவர்களின் குறும்படம் என இவர் நடிக்கும் படங்களும் வித்தியாசமாகவே உள்ளன.
அழகப்பன் சி. யின் குழந்தைகளுக்கான திரைப்படம் வண்ணத்துப்பூச்சியால் நீதிபதியாக நடித்தவர், சீதா எனும் குறும்படத்தில் நடித்து வருகிறார். திரைப்பட பயிற்சி மாணவர்கள் ஒளிப்பதிவு செய்ய ராஜீவ்மேனன் சீதாவை இயக்குகிறார்.