2008-ல் இதுவரை வெளியான படங்களில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்த படங்கள் ஐந்து. அஞ்சாதே, யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம், தசாவதாரம் கடைசியாக சுப்ரமணியபுரம்.
இதில் தசாவதாரம் ப்ளாக் பஸ்டர். 38 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் எட்டரை கோடி வசூலித்துள்ளது.
பிரபலமில்லாத நடிகர்களின் சுப்ரமணியபுரத்துக்கு தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பு. படம் நன்றாகப் போவதால் சென்னை திரையரங்குள் சிலவற்றில் நேற்று முதல் படம் புதிதாக திரையிடப்பட்டுள்ளது. சிறிய திரையரங்கில் ஒரு காட்சி, மூன்று காட்சி ஓடிய படத்தை பெரிய திரையரங்கில் மாற்றி நான்கு காட்சிகளாக்கியுள்ளனர். அப்படியும் திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம்.
இந்த வருடம் எதிர்பாராத சர்ப்ரைஸ் சுப்ரமணியபுரம்!