வார்னர் பிரதர்ஸ், ஆக்கர் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் படங்களுக்கு முதலில் ஒப்பந்தமானவர் அஜித். பில்லாவின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். படத்தை இயக்குவது விஷ்ணுவர்தன்.
இவர்களுக்குப் பிறகே வெகட்பிரபு இயக்கும் படம் ஒப்பந்தமானது. ஆனாலும், ஹாலிவுட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பை இவரே இயக்குகிறார். தனது வழக்கமான ஸ்டைலில் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு.
பில்லா இரண்டாம் பாகத்தை இயக்க விஷ்ணுவர்தனுக்கு சம்பளமாக இரண்டு கோடி பேசப்பட்டது. வெங்கட்பிரபுவுக்கும் அதே இரண்டு கோடி ரூபாயாம் சம்பளம்.
வார்னர் பிரதர்ஸின் அஷ்டலட்சுமி பார்வை விழுந்திருக்கும் இன்னொரு இயக்குனர் ஜெயம் ராஜாவாம். கொடுத்து வைத்த ராஜாக்கள்!