Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் மக்மல்பஃப்!

Advertiesment
சென்னையில் மக்மல்பஃப்!
, வெள்ளி, 25 ஜூலை 2008 (19:56 IST)
சினிமா தொழில்நுட்பத்தின் தவிர்க்க முடியாத நகரமாகி வருகிறது சென்னை. ஈரான் இயக்குனர் மோஸன் மக்மல்பஃப்-பின் சென்னை வருகை இதற்கு சிறந்த உதாரணம்.

கேன்ஸ் உள்ளிட்ட பெருமைக்குரிய விருதுகளின் சொந்தக்காரர் மக்மல்பஃப். இவரது கந்தகாரும், தி சைக்கிளிஸ்டும் காலத்தால் அழியாத காவியங்கள்.

ஈரானின் சென்சார் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக கசகஸ்தானில் வசித்து வருகிறவர், தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார்.

தனது புதிய படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளையும், கலர் கரெக்சனையும் சென்னையில் வைத்துக் கொள்வது தொடர்பாக இங்குள்ள ஸ்டுடியோக்களிடம் பேச்சு நடத்த வந்துள்ளார் மக்மல்பஃப்.

சென்னையில் சினிமா தொழில்நுட்பமும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏராளம், மேலும் தரமானவை என புகழ்கிறார் மக்மல்பஃப்.

தமிழ் சினிமா தனது காலரை ஒருமுறை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil