Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிகட்டத்தில் பலம்!

Advertiesment
இறுதிகட்டத்தில் பலம்!
, வெள்ளி, 25 ஜூலை 2008 (15:56 IST)
புதுமுகங்களை வைத்து தொடங்கிய பலம் படத்தை புயல் வேகத்தில் எடுத்து வருகிறார் இயக்குனர் முரளி கிருஷ்ணா. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

போலீஸ் அதிகாரியான ரகுமானுக்கும் பட்டதாரி இளைஞன் அரவிந்துக்கும் நடக்கும் போட்டா போட்டியே பலம். அரவிந்தின் அண்ணியாக சுஹாசினியும், ஜோடியாக மும்பை இறக்குமதி தீபாச்சாரியும் நடித்துள்ளனர். 2003-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்ட தீபாச்சாரி, டூபீஸில் நடிக்கவும் தயார் என கூறியிருப்பது படத்திற்கு பக்க பலம்.

படத்தின் இன்னொரு பலம் இசை. தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரணியை கழற்றிவிட்டு புகேந்திரனுக்கு வாய்ப்பளித்துள்ளார் முரளி கிருஷ்ணா. நம்பிக்கையை காப்பாற்றும்படி அற்புதமாக டியூன் போட்டிருப்பதாக யுகேந்திரனை பாராட்டுகிறார் முரளி கிருஷ்ணா.

படத்திற்கு பல பலங்கள் இருந்தாலும் நிஜமான பலம் முரளி கிருஷ்ணா படத்தை எடுத்துவரும் வேகம். பட்ஜெட்டை விட குறைவாக செவழித்ததாக அவரை கொண்டாடுகிறது தயாரிப்பாளர் தரப்பு.

Share this Story:

Follow Webdunia tamil