Entertainment Film Featuresorarticles 0807 24 1080724073_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வார்னர் பிரதர்ஸில் ஜெயம் ராஜா!

Advertiesment
வார்னர் பிரதர்‌ஸ் ஜெயம் ராஜா
, வியாழன், 24 ஜூலை 2008 (20:14 IST)
ரீ-மேக் ராஜா என்ற பெயரை துடைத்தெறிய தயாராகிவிட்டார் ஜெயம் ராஜா. இவர் இயக்கிய ஜெயம், எம். குமரண் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய நான்குமே தெலுங்கு ரீ-மேக் படங்கள். நான்கிலும் இவரது தம்பி ஜெயம் ரவியே ஹீரோ. நான்கு படங்களுமே ஹிட்!

இதுவொரு சாதனை என்றாலும், ரீ-மேக் படங்களை மட்டுமே இயக்குவார் என முதுகுக்குப் பின்னால் பலரும் பேசுவது ஜெயம் ராஜாவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. அடுத்தது நேரடி தமிழ்ப் படம் தான் என சபதம் போட்டிருப்பவரை வாரி அணைத்திருக்கிறது வார்னர் பிரதர்ஸ்.

செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து வார்னர் பிரதர்ஸ் தமிழ்ப் படங்களை தயாரிக்கிறது. அஜித், விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு ஆகியவர்களை ஒப்பந்தம் செய்திருக்கும் இந்நிறுவனம் ஜெயம் ராஜாவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளது.

ஜெயம் ராஜா இயக்கும் நேடித் தமிழ்ப் படமான இதில் ஜெயம் ரவி நடிக்கவில்லை. முற்றிலும் புதிய காம்பினேஷனுடன் களம் காண்கிறார் ராஜா. பெயரிலுள்ள ஜெயம் தொடர்ந்து நிலைக்கட்டும்!

Share this Story:

Follow Webdunia tamil