அனாவசியமாக பேசி அசிங்கப்படுவதில் சேரனுக்கு என்னவோ அலாதி பிரியம். இப்போது கொஞ்சமாக சீண்டி கொத்துக்கறி ஆகியிருப்பது ப்ரியாமணியிடம்.
இவர் தனது பொக்கிஷம் படத்தில் நடிக்க ப்ரியாமணியிடம் கேட்டாராம். போனில் பேசிய ப்ரியாமணி இரண்டு நாள் கழித்து பேசுவதாகக் கூறிவிட்டு பேசவே இல்லையாம். தகுதிக்கு மீறி புகழ் கிடைத்ததால்தான் இப்படி தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார் என போகிற போக்கில் பேட்டியொன்றில் ப்ரியாமணியை சதாய்த்தார் சேரன். பெங்களூர் தக்காளிக்கு அப்படியே பொங்கிவிட்டது.
சேரன் என்னிடம் பேசவில்லை. அவரது அலுவலகத்திலிருந்து யாரோதான் பேசினார்கள். தெலுங்கு, தமிழ்ப் படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்ய முடியுமா என இரண்டுநாள் கழித்து சொல்கிறேன் என்றேன். இரண்டு நாள் கழித்தும் சேரன் பேசவில்லை. முதலில் பேசிய ஆள்தான் பேசினார். மணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறேன். அவர் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார். இப்படியொரு சூழலில் பொக்கிஷத்தில் எப்படி நடிக்க முடியும்?
காரணத்தை சாதாரணமாக விளக்கியவர், பிறகுதான் சேரனை பிரித்து மேய்ந்தார்.
தனது படத்தில் நடிக்கிற ஹீரோயின்களை தவிர வேறு யாருக்கும் நடிக்கத் தெரியாது என சேரன் நினைக்கிறார் எனத் தொடங்கி, தன்னை விமர்சித்த விமர்சிக்கும் விமர்சிக்கப் போகிற அனைவரையும் வார்த்தையால் பொலி போட்டார் ப்ரியாமணி.
ப்ரியாமணி என்றாரே காதை மூடி ஓரமாகப் போகிறார்கள் கோலிவுட்டில். மணிக்கு சத்தம் கொஞ்சம் அதிகம்தான்!