Publish Date: Thu, 24 Jul 2008 (20:09 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (20:08 IST)
விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் படம் காதலில் விழுந்தேன். இதில் நாக்க முக்க என்று குத்துப் பாடலொன்று வருகிறது. படம் வெளியாகும் முன்பே நாக்க முக்க எல்லாருடைய நாக்கிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. டி.வி.யை ஆன் செய்தால், மானாடுகிறதோ மயிலாடுகிறதோ... நாக்க முக்க பேயாட்டம் போடுகிறது.
பாடலின் பிரபலத்தைப் பார்த்த தயாரிப்பாளர் நமிதாவை வைத்து நாக்க முக்க பாடலை எடுக்க விரும்புகிறார். இதிலென்ன அதிசயம் என்று தோன்றும். அதிசயம் இருக்கிறது.
நாக்க முக்க பாடலை ஹீரோ நகுலை வைத்து ஏற்கனவே தீவுத் திடலில் எடுத்துவிட்டனர். பாடல் கன்னா பின்னாவென ஹிட்டாக முதலில் எடுத்ததை ஓரமாக ஒதுக்கி வைத்து புதிதாக நமிதாவை வைத்து எடுக்கிறார்கள்.
நாக்க முக்க பாடலுக்கு நமிதாவை விட நல்ல சாய்ஸ் இருக்க முடியாதுதான்!