தசாவதாரம் படத்தில் நாடார்களுக்கு எதிரான வசனம் இடம்பெற்றுள்ளதற்கு இடம்பெற்றுதற்கு நாடார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தசாவதாரத்தில் வரும் தலித் கேரக்டர் வின்சென்ட் பூவராகன், மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் போராளி. இவருக்கும் மணல் கொள்ளைக்கு காரணமான பி. வாசுவுக்கும் படத்தில் காரசாரமான விவாதம் ஒன்று இடம்பெறுகிறது. இந்த வசனம் இப்போது கமலுக்கு பிரச்சனையாகியிருக்கிறது.
பூவராகன் பி. வாசுவை நாடார்களை குறிக்கும் பிரச்சனைக்குரிய ஒரு சொல்லால் அழைப்பதாகவும், இது தங்கள் சாதியை இழிவுபடுத்துவதாகவும் கூறி சில நாடார் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. கண்டன போஸ்டர்களுடன் தொடங்கியிருக்கும் இந்த போராட்டம் கமலின் ரியாக்சனை பொறுத்து மாறுபடுமாம்.
மர்மயோகியில் மூழ்கியிருக்கும் கமலின் காதுகளுக்கு இந்தப் போராட்டத்தின் குரலை கேட்கும் திறன் கிடையாது என்பது பாவம் போராடுகிறவர்களுக்குத் தெரியாது.