Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் கவுண்டமணி - செந்தில்!

Advertiesment
மீண்டும் கவுண்டமணி - செந்தில்!
, வியாழன், 24 ஜூலை 2008 (20:02 IST)
தமிழ்த் திரையுலகில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் இல்லாமல் எந்த படமும் பூஜையே போடமாட்டார்கள் என்றிருந்த நிலை.

அதற்குப் பின்னால் வடிவேலு, விவேக், கருணாஸ் என்று நகைச்சுவை நடிகர்கள் வரவே இவர்களுக்கான வாய்ப்பு குறைய ஆரம்பித்து. செந்தில் தனியாக ஒன்றிரண்டு படங்கள் செய்தாலும் கவுண்டமணி படங்கள் தவிர்த்து வந்தார்.

அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின் சத்தியராஜின் வற்புறுத்லுக்கு இணங்க, தங்கம் என்ற படத்தில் நடித்தார் கவுண்டமணி. அவரின் காமெடிக்காக படம் நன்றாக ஓட, மீண்டும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ஆனாலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர் தற்போது மீண்டும் ஒரு வலம் வரும் முயற்சியில் இறங்க முடிவு செய்துள்ளார். இருந்தாலும் தேர்ந்தெடுத்தே படங்களை ஒப்புக்கொள்கிறார்.

அந்த வகையில் தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் 'ஜக்குபாய்' படத்தில் நடிக்க உள்ளார். இவரை மட்டும் நடிக்க வைத்தால் போதாது என்று எண்ணி ரவிக்குமார் கவுண்டமணியிடம் உதை வாங்க... செந்திலையும் நடிக்க கேட்டுள்ளார். மீண்டும் உதைப் படலம் ஆரம்பம்.

Share this Story:

Follow Webdunia tamil