Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நன்றிக் கடன்!

Advertiesment
நன்றிக் கடன்!
, புதன், 23 ஜூலை 2008 (20:32 IST)
உன்னைச் சரணடைந்தேன், நெறஞ்ச மனசு ஆகிய திரைப்படமும், சில டி.வி. தொடர்களும் இயக்கியவர் சமுத்திரக்கனி. பாலசந்தரின் உதவியாளரான இவர் தற்போது சுப்ரமணியபுரம் படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இரண்டு படங்கள், சீரியல் இயக்கியும் கிடைத்த பெயரும், புகழும் இந்த ஒரு படத்தில் நடித்ததன் மூலம் பெற்றுவிட்டேன் என்று ஆனந்தப் பட்டாலும், என் முழு நேர பணி படங்கள் இயக்குவதுதான் என்பதில் உறுதியுடன் இருக்கிறார் சமுத்திரக்கனி.

மேலும் தனக்கு நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்த சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமாருக்கு அடுத்து இயக்கப் போகும் தனது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்து தனது நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டார் சமுத்திரக்கனி.

அடுத்த படத்திற்கான கதை விவாதம் இருந்தும் சமுத்திரக்கனி கேட்டுக் கொண்டதற்கிணங்க... தனது பட வேலைகளை தள்ளிவைத்துவிட்டு சமுத்திரக்கனி படத்தில் நடிக்க வந்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார்.

நடிக்க நிறைய பணமும் புகழும் கிடைக்கும் என்பதற்காக சசி போன்ற இயக்குனர்கள் முழுக்க.. முழுக்க நடிக்கப் போகாமல் இருந்தால் சரி.

Share this Story:

Follow Webdunia tamil