கேப்டன் விஜயகாந்தை வைத்து 'எங்கள் ஆசான்' என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் தங்கராஜ். இவர் ஏற்கனவே 'சுந்தரா டிராவல்ஸ்', 'மீசை மாவதன்' ஆகிய படங்களைத் தயாரித்தவர்.
அத்தோடு மீசை மாதவனில் நடிக்கவும் செய்தார். அப்படி நடித்தாலாவது வெளி படங்களுக்கும் நடிக்க அழைப்பார்கள் என்று கண்ட கனவு நடக்கவில்லை.
இதனால் மீண்டும் தயாரிப்புக்கு வந்த தங்கராஜ் எங்கள் ஆசானிலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கேப்டனைப் பாராட்டி ஒரு பாடலையும் அவரே எழுதியிருக்கிறார்.
தயாரிப்பு, நடிப்பு கைவிட்டாலும் 'க்ளிக்' ஆனால் பாடல்களாவது எழுதிக்கொண்டு இருக்கலாமே என்ற நம்பிக்கைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை.
சொல்லப் போனால் பேரரசுக்குப் போட்டியாக, இயக்கி அப்படியே பாடல்களும் எழுத முயற்சி செய்யுங்கள். யாரிடம் என்ன திறமை இருக்கிறதென்று சொல்ல முடியாது.