Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனால் நொந்த மணி!

Advertiesment
மகனால் நொந்த மணி!
, புதன், 23 ஜூலை 2008 (20:23 IST)
எப்போதும் கலகலப்பாக இருக்கும் இயக்குனர், நடிகர் மணிவண்ணன் தற்போது வெளியுலகத் தொடர்பே இல்லாமல் மெளனம் காத்து வருகிறார். காரணம் தனது மகன் செய்த காதல் சேட்டைதான்.

உதவி இயக்குனரான பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி குடும்பமே நடத்தியிருக்கிறார். இதனால் நொந்துபோன மணிவண்ணன் வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கிறார்.

இவரைத் தேடி பல இயக்குனர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். இந்த விஷயம் ஒரு அரசியல் தலைவர் காதுக்குச் செல்ல, அந்த உதவி இயக்கப் பெண் தற்போது கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, அப்பெண்ணைப் பற்றி விமர்சனம் செய்த இயக்குனர் சீமான் மீதும் மானநஷ்ட வழக்குப் போடுவதாக மிரட்டிய அப்பெண்மணி அதை கைவிடும் நிலைக்கும் போயிருக்கிறார். பின்னே பெரிய இடத்திலிருந்து மிரட்டல் வந்தால் யாரும் ஆடிப்போக, இந்தப் பெண் பாவம் என்ன செய்வாள்.

ஆனாலும், விடப்போவதில்லை என்று தன் தோழிகள் மத்தியில் அலப்பரை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil