Publish Date: Thu, 24 Jul 2008 (14:25 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (14:25 IST)
இனி பருத்திவீரன் போன்ற கேரக்டரில் நடிக்கமாட்டேன் என்று உறுதியுடன் கூறிவருகிறார் நடிகர் கார்த்திக். அந்த படத்திற்காக நிறைய பாராட்டும், பிலிம்ஃபேர் விருதும், 'கேன்ஸ்' பட விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என கிடைத்தாலும் அதுபோன்ற சீரியஸ் மேட்டர் நல்ல ஆக்சன் ஹீரோவுக்கு கைகொடுக்காது.
தற்போது நடித்துவரும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வித்தியாசமான ஆக்சன் ஹீரோவாக வருகிறேன். அதையடுத்து இயக்குனர் லிங்குசாமி படத்திலும் ஆக்சன் ஹீரோதான். இப்படி படத்துக்குப் படம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
ஆனால், இனி கதை சொல்ல வரும் இயக்குனர்களும் நல்ல அதிரடியான ஆக்சன், த்ரில்லர் கதைகளை சொன்னால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனாலும் என் அண்ணன் சூர்யாவை காப்பி அடிக்கமாட்டேன். அவரின் பாணி தனி, என் பாணி தனி. அப்படி அவரவருக்கென தனித்தன்மை இருந்தால்தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஒன்றிரண்டு படங்களோடு மூட்டையைக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.