அமெரிக்க தெருக்களை அமைஞ்சிக்கரையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன ரஜினியின் மெகா கட்-அவுட்கள்.
சென்ற இடமெல்லாம் தங்களது கலாச்சாரத்தை பரப்புகிறவன் தமிழன் என்று சும்மாவா சொன்னார்கள். ரஜினி உபயத்தில் தமிழ்நாட்டின் கட்-அவுட் கலாச்சாரம் அமெரிக்காவிற்கு கப்பலேறியிருக்கிறது.
குசேலன் ரிலீஸையொட்டி படம் திரையிடப்படும் திரையரங்குகளின் முன்பு 25 அடி உயரத்தில் ரஜினியின் கட்-அவுட்களை வைத்துள்ளார் அமெரிக்க வாழ் தமிழரான ஜெயவேல் முருகன். குசேலனின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியிருக்கும் இவர், தமிழ் நடிகர் ஒருவருக்கு அமெரிக்காவில் கட்-அவுட் வைப்பது இதுவே முதல் முறை என்றார் பெருமையாக.
இந்த புதிய கலாச்சாரத்தை அமெரிக்கர்கள் ஆர்வமுடன் அண்ணாந்து பார்த்து சொல்கிறார்கள். சிலர், படம் எப்போது ரிலீஸ் என்றும் கேட்கிறார்களாம்.
அதிபர் தேர்தலுக்கு இந்த கட்-அவுட் கலாச்சாரத்தை பின்பற்றாமல் அமெரிக்கர்களை சுதந்திர தேவிதான் காக்க வேண்டும்!