Publish Date: Tue, 22 Jul 2008 (20:19 IST)
Updated Date: Tue, 22 Jul 2008 (20:18 IST)
உலக சினிமாவை சென்னை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ICAF, ரசிகர்களுக்கு இம்மாதம் அளிக்கும் இன்ப அதிர்ச்சி, இலங்கை திரைப்பட விழா.
நேற்று சென்னை ·பிலிம் சேம்பரில் திரைப்பட விழாவின் தொடக்க விழா. இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி அம்சா, நடிகர் ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கலந்து கொண்டார்.
நேற்று தொடங்கிய திரைப்பட விழா வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 'தீர்த்த யாத்ரா', 'சுது செவனெலி' போன்ற இலங்கையின் முக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் ICAF நிர்வாகி தங்கராஜை சந்தித்து விழாவுக்கான நுழைவுச் சீட்டை பெபற்றுக் கொள்ளலாம்.