நேற்று நடிகர் பரத்துக்கு பிறந்தநாள். ரசிகர்களுடன் கேக் வெட்டி அவர் பிறந்தநாளை கொண்டாட, தனுஷும் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார். இதுவும் பிறந்தநாள் கேக்தான்!
வரும் 28 ஆம் தேதி தனுஷுக்கு பிறந்தநாள். அன்றைய தினம் படிக்காதவன் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதால் நேற்று அட்வான்சாக பிறந்தநாளை கொண்டாடினார்.
இதுவரை நற்பணி என்று கிள்ளி கொடுக்காதவர், இனி அள்ளி கொடுக்கப் போகிறாராம். அச்சாரமாக தனுஷ் ரசிகர்கள் சிலர் ரத்த தானம் செய்தனர்.
கேக் வெட்டும்போது ஹேப்பி பர்த்டேயுடன் சிலர் இளைய சூப்பர் ஸ்டார் என புதுப்பட்டம் கொடுத்து கோஷடம் போட, பதறிவிட்டார் தனுஷ். பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம், அதுவும் இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவே அழைக்காதீர்கள் என்றார்.
மாமனாரின் பட்டம் மீது மருமகனுக்கு இருப்பது பயமா? மரியாதையா?