Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமீரின் சபதம்!

அமீரின் சபதம்!
, திங்கள், 21 ஜூலை 2008 (20:37 IST)
உணர்ச்சிவசப்படுகிறவர்கள் தானே கலைஞர்கள். பாரதிராஜாவின் உணர்ச்சிப் பேச்சுகள் உலகறிந்தவை. அவருக்கு இணையாக கிளம்பியிருக்கிறார் அமீர்.

கமல், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் என பிரபலங்களை தொடர்ந்து கேள்விகளால் திணறடித்தவர் (?) தனது பார்வையை இப்போது ஈழத் தமிழர்களின்பால் திருப்பியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் துயரை வெளிப்படுத்தும் ஒரு படத்தை இயக்குவேன் என ஏற்கனவே கூறியிருந்தார் அமீர். இளம்புயல் இசை வெளியீட்டு விழாவில் இதனை மீண்டும் வலியுறுத்தினார் அமீர்.

தமிழை வாழவைப்பவர்கள் உலகொங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள்தான் என்றவர், அவர்களைப் பற்றி கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன் என்றபோது அரங்கில் அப்படியொரு கரகோஷம்.

இளம்புயல் படத்தை இயக்கியதும், தயாரித்ததும் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர் என்பதால்தான் இந்த கரகோஷம்.

Share this Story:

Follow Webdunia tamil