Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரசாந்த் - சரித்திர நாயகன்!

Advertiesment
பிரசாந்த் - சரித்திர நாயகன்!
, சனி, 19 ஜூலை 2008 (21:01 IST)
எத்தனையோ வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், நான் அதிகம் விரும்பிய வேடம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது! பரவசம் பொங்க இப்படி கூறியது, நடிகர் பிரசாந்த்.

முதல்வர் கருணாநிதியின் பொன்னர் சங்கர் வரலாற்று கதையில் சரித்திர வேடம் போடுகிறார் பிரசாந்த். சரித்திர கதையில் நடிக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசை... கனவு!

மகனின் கனவுக்காக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் செலவழிக்க இருக்கும் பணம்... ஒருமுறை நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை இருபத்தைந்து கோடிகள்! இது நாம் விசாரித்த வரை கிடைத்த தகவல். படப்பிடிப்பு முடியும்போது பட்ஜெட் இன்னும் எகிறுமாம்.

எதற்கு இத்தனை செலவு என்று கேட்டால், ஹாலிவுட்டின் பிரேவ்ஹார்ட், ட்ராய் போல பிரமாண்டமாக எடுக்கிறோம். செலவு ஆகாதா என கூலாக திருப்பிக் கேட்கிறார்கள் தந்தையும் மகனும்.

இருபத்தைந்து என்ன அதற்கு மேலேயே ஆகும்!

Share this Story:

Follow Webdunia tamil