தலைக்கனம் அதிகமானால் அகராதி பிடிச்சு அலையுறான் என்பார்கள். வார்த்தைக்கு பொருள் தெரியவில்லையென்றால் தேடுவதும் அகராதிதான். தலைக்கனத்திற்கும் இலக்கணத்திற்கும் பொருந்திப் போகும் அகராதி கான்செப்டை வைத்தே ஒரு படம். பெயரும் அதே... அகராதி!
குடும்பப் பின்னணி, உறவு சிக்கல் இவற்றுடன் பணத்தால் விளையும் கலாச்சார விபரீதங்கள் மூன்றையும் கூட்டிச் சேர்த்தால் அதுதான் அகராதியின் கதை.
நாகா வெங்கடேஷ் இயக்கும் இந்தப் படத்தில் மோனிகா, கிரண் என இரு நாயகிகள். அதிரடிக்கு மூமைத்கானின் ஆட்டமும் உண்டு. அதற்காகவே சுந்தர் சி. பாபு இசையமைத்திருக்கும் பாடல் ஜிகிடு ஜிகிடு பம்பம்...
எந்த அகராதியை புரட்டினாலும் இதற்கு விளக்கம் கிடைக்குமா என்பது சந்தேகமே!