வாரணம் ஆயிரம் படத்தின் டாக்கி ·போர்ஷன் முடிவடைந்த நிலையில் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி. சூர்யாவுடன் சிம்ரன் இந்தப் பாடலில் நடிக்கிறார்.
இளமை முதல் முதுமை வரை ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் படம் வாரணம் ஆயிரம். இதில் திவ்யா, சமீரா ரெட்டி என சூர்யாவுக்கு இரண்டு ஜோடிகள். மூன்றாவது ஜோடி சிம்ரன்.
வயதான சூரூயாவின் ஜோடியாக வருகிறாராம் சிம்ரன். இவர்களின் இளமைப் பருவத்தை நினைவுகூர்வதாக பாடல் ஒன்று வருகிறது. உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் விரைவில் எடுக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் மாதம் வாரணம் ஆயிரம் திரைக்கு வருகிறது.